காஞ்சிபுரத்தில் ரத்ததான முகாம்
காஞ்சிபுரம், நவ.30:
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் இந்தியமருத்துவச் சங்கம், இறைத்துளிகள் இயக்கம், ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆகியோயர் இணைந்து ரத்ததான முகாமை நடத்தினார்கள்.
முகாமை இந்திய மருத்துவச் சங்கம் காஞ்சிபுரம் கிளையின் தலைவர் ரவி தொடங்கி வைத்தார். செயலாளர் முத்துக்குமரன், புற்று நோய் மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மருத்துவர்கள் சிந்துஜா, முத்துக்குமரன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.முகாமில் அறுவைச்சிகிச்சை மருத்துவர் கர்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஹெச்டிஎப்சி வங்கி மேலாளர் சிவா,மருந்து விற்பனை பிரதிநிதிகள் சேமராஜ், தணிகையரசு ஆகியோர் செய்திருந்தனர்.
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!

No comments
Thank you for your comments