தூய்மைப்பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் எம்எல்ஏ க.சுந்தர்
காஞ்சிபுரம், நவ.3:
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40 ஊராட்சிகளில் மொத்தம் 107 தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் அனைவருக்கும் தாட்கோ நிறுவனத்தின் சார்பில் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கும் விழா ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் தலைமையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் காஞ்சனா, தாட்கோ மண்டல மேலாளர் ராஜசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் கலந்து கொண்டு தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் திமுக காஞ்சிபுரம் ஒன்றியத்தின் தலைவர் பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள்,அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments