மணவாளநல்லூரில் கூலி தொழிலாளியின் கூரை வீடு தீக்கிரை – பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று நிவாரண உதவி!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் கிராமத்தில் கூலி தொழிலாளி சுப்பிரமணியன் அவர்களின் கூரை வீடு, இரவு நேரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்து மலமல எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. வீட்டு உள்பொருட்கள் அனைத்தும் நாசமாகி, குடும்பம் துயரத்தில் ஆழ்ந்தது.
பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்
தகவல் அறிந்தவுடன்,
- விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர் ஏற்பாட்டில்,
- கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி தலைமையில்பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அரசு உதவி உறுதி
பாஜக நிர்வாகிகள்,
- பி.எம்.ஏ.ஒய் (PMAY) திட்டத்தில் உடனடி வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்தனர்.
- தீ விபத்தில் பள்ளி சான்றுகள், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமானதால்,
அரசிடம் உடனடி மாற்றுச் சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.
நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாஜக சார்பில்:
- நிதி உதவி
- போர்வை
- பாய்
- அரிசி
- மல்லிகைப்பொருட்கள்
- துணிவகைகள்
உள்ளிட்ட முக்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் உதவி உறுதி
எரிந்த ஆவணங்களுக்கு பதிலாக புதிய ஆவணங்களை பெற தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து தருவோம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
பாஜக நகர ஒன்றிய நிர்வாகிகளும் பலரும் கலந்து கொண்டு துயரத்தில் உள்ள குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments