காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் – 382 மனுக்கள் பெறப்பட்டது!
காஞ்சிபுரம், நவ.24:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பாக்கிய லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடமிருந்து மொத்தம் 382 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அக்கோரிக்கை மனுக்களை அனுப்பி உடனடியாக தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments