உத்தரமேரூர் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பாராட்டு
காஞ்சிபுரம், நவ.25:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4.11.2025 ஆம் தேதி முதல் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் உட்பட்ட கிராமங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியும்,பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கணக்கெடுப்பு படிவங்களை 100 சதவிகிதம் டிஜிட்டல் மயமாக்கம் செய்த உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஹெச். அம்பிகாவுக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து நினைவுப்பரிசும்,பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
வாலாஜாபாத் ஒன்றியம் சங்கராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வின் போது உத்தரமேரூர் தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் பு.விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments