Breaking News

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக அமைச்சர் தரிசனம்


காஞ்சிபுரம், நவ.12:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக வேளாண்மைத்துறை அமைச்சர் என்.சலுவராய சுவாமி புதன்கிழமை தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக வேளாண்மைத்துறை அமைச்சர் என்.சலுவராய சுவாமி தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.


தரிசனத்துக்கு பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்தும், சுவாமி படம் மற்றும் கோயில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு சென்று மகா பெரியவர் அதிஷ்டானத்தில் வழிபாடு செய்தார். முன்னதாக சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் அவரை வரவேற்று மடத்திற்குள் அழைத்து சென்றார்.



அமைச்சருடன் மாநகர துணை மேயர் ஆர்.குமரகுருநாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சீனிவாச ராகவன், மாநகர தலைவர் நாதன், மாநிலக்குழு உறுப்பினர் பத்மனாபன், வழக்குரைஞர்பிரிவு நிர்வாகிகள் ரகு,ஜி.வீ. மதியழகன்,லோகநாதன் ஆகியோர் உட்பட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

 .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 



















No comments

Thank you for your comments