Breaking News

ரூபாய் 31 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் - அடிக்கல் நாட்டினார் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன்


காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம்  மாநகராட்சிக்கு உட்பட்ட இரு வேறு  வார்டு பகுதிகளில் ரூபாய் 31 லட்சம் மதிப்பீட்டில்  அங்கன்வாடி மையம்,   காரிய மண்டபம் அமைப்பதற்கு காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் இன்று அடிக்கல் நாட்டி கட்டிடப் பணிகளை துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி  2வது வார்டுக்கு உட்பட்ட சர்வதீர்த்த குளக்கரை அருகில் முன்னோர்களுக்கு காரியம் செய்யவதற்காக காரிய மண்டபமானது அமைந்துள்ளது.

இந்நிலையில் அம் மண்டபமானது போதுமானதாக இல்லாத காரணத்தால் கூடுதலாக காரிய மண்டபம் அமைத்திட வேண்டும் என பொது மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2024- 25ன் கீழ் ரூ.18.00 இலட்சத்தில் புதியதாக  காரிய மண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று புதிய காரியம் மண்டபம் அமைப்பதற்க்கு காஞ்சிபுரம் எம்.எம்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் அடிக்கல் நாட்டி கட்டிடப் பணிகளை துவக்கி வைத்தார்.


மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட தேரடி தெருவில்  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2024-25ன் கீழ் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையத்திற்கும் காஞ்சிபுரம் எம்.எம்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், மண்டலக் குழுத் தலைவர் சசிகலா கனேஷ், மாமன்ற உறுப்பினர்கள் விமலா தேவி, ஜோதிலட்சுமி சிவாஜி,திமுக நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.

 .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

வார ராசி பலன்கள் :  நல்ல பலன்களை அடைய என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?


















No comments

Thank you for your comments