தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி, 12 தங்கம், 5 வெள்ளி பெற்று காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை
காஞ்சிபுரம், நவ.12:
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் காஞ்சிபுரம் மாணவர்கள் 12 தங்கப்பதக்கம்,5 வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இம்மாதம் 9,10,11 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான 7 வது தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் குஜராத், ஹரியானா, மத்தியப்பிரதேசம் உட்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் காஞ்சிபுரம் ஸ்போர்ட்ஸ் அகாதெமி சார்பில் 18 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவுக்குரிய போட்டியில் 6 தங்கமும்,10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 6 தங்கமும்,5 பேர் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்களுக்கு பிள்ளையார்பாளையம் அருகில் உள்ள காஞ்சிபுரம் ஸ்போர்ட்ஸ் அகாதெமி சார்பிலும்,பொதுமக்கள் சார்பிலும் மங்கல மேள வாத்தியங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இத்தகவலை தலைமைப் பயிற்சியாளர் பாபு,துணைப் பயிற்சியாளர் தமிழரசு ஆகியோர் தெரிவித்தனர்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments