Breaking News

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூரில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு!



காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பையும், குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் புறக்காவல் நிலையங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.



அதன்படி, பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்கதிர்பூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் இன்று (12.11.2025) புதிய புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

இக்குடியிருப்பு 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இதில் சுமார் 2,112 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நோக்கில் இப்புறக்காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் திரு. K. சண்முகம் தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு. சங்கர் கணேஷ், திரு. கார்த்திக்கேயன் (பயிற்சி) மற்றும் காவல் ஆய்வாளர் திரு. பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கீழ்கதிர்பூர் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட குடியிருப்பில் வசிக்கும் பல பொதுமக்கள் கலந்துகொண்டு காவல்துறையின் நடவடிக்கையை பாராட்டினர்.

மேற்படி புறக்காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இதன் மூலம் பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.


 .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 



















No comments

Thank you for your comments