தமிழில் சிறந்து விளங்குபவர்களுக்கு பெருமிதச் செல்வன், பெருமிதச்செல்வி பட்டம்- ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேச்சு
காஞ்சிபுரம், நவ.12:
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கான மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
நமது தமிழ் மரபின் வளமை,பாண்பாட்டில் செழுமை,சமூக சமத்துவம்,பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் ஆகியனவற்றை இளைய தலைமுறையினரிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க்கனவு பரப்புரை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.நிகழ்வுகள் நடைபெறும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கு பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..
இதன் மூலம் 2 லட்சம் மாணவர்களை சென்றடைவதே இதன் நோக்கம்.
மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வுகளில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூல்,தமிழ்ப்பெருமிதம் குறிப்பேடு ஆகியனவும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்ப்பெருமிதம் சிற்றேட்டில் உள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கமளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வன்,பெருமிதச் செல்வி பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகன்,கேள்வியின் நாயகி என்ற பட்டமும்,சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றும் பேசினார்.
நிறைவாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments