ரூபாய் 1கோடியே 41.70 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார் கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு ....!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1கோடி 41.70 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழாவை கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
இதில் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார் சாலை அமைத்தல், மழைநீர் வடிநீர் கால்வாய் , கான்கிரீட் தளம் அமைத்தல்,தடுப்புச் சுவர் அமைத்தல், சிறு பாலம் அமைத்தல், கம்பி வேலி ஆகிய பல திட்டங்களை கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு துவக்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் பூவேந்திரன்,நகர மன்ற துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம் ,26வது வார்டு கவுன்சிலர் கீர்த்தனா,26 வார்டு செயலாளர் உதயகுமார், 16வது வார்டு துரை செந்தில்,கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455



No comments
Thank you for your comments