தேசிய யோகா போட்டியில் 2 வது இடம் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி - காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டு
காஞ்சிபுரம், நவ.3:
காஞ்சிபுரம் நத்தப்பேட்டையை சேர்ந்த மூர்த்தி-கௌரி தம்பதியரின் மகள் சுகப்பிரியா(12) முதுகுத்தண்டு வட பாதிப்புடைய மாற்றுத்திறனாளியான இவர் காஞ்சிபுரம் பி.எம்.எஸ்.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் புதுதில்லியில் கடந்த செப்.26 முதல் 28 வரை நடந்த மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நடத்திய பாரா நேஷனல் யோகா ஸ்போட்ஸ் யோகாசனப் போட்டியில் தேசிய அளவில் 2 வது இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
வெள்ளிப்பதக்கத்துடன் சுகப்பிரியா தனது பெற்றோர் மற்றும் யோகா பயிற்சியாளர் யுவராஜ் ஆகியோருடன் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசனை சந்தித்தார்.
சுகப்பிரியாவுக்கு மாவட்ட வருவாய் அலுலலர் சால்வை அணிவித்து கௌரவித்து தமிழகத்துக்கும்,காஞ்சிபுரத்துக்கும் பெருமை சேர்த்திருப்பதாக கூறி பாராட்டினார்.
No comments
Thank you for your comments