Breaking News

காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர் இறந்து விட்டதாக போலி இறப்புச் சான்றிதழ் - மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

காஞ்சிபுரம், நவ.3:

காஞ்சிபுரம் 48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்கேபி கார்த்திக் இறந்து விட்டதாக போலி இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியறுத்தி திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் உறுப்பினர் புகார் செய்தார்.

காஞ்சிபுரம் நாகலூத்து தெருவைச் சேர்ந்தவர் எஸ்கேபி.கார்த்திக்(35)இவர் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 48 வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.இவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக காஞ்சிபுரம் காமராஜர் தெருவில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் வேணுகோபால் இறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளார். 


இது குறித்து மாமன்ற உறுப்பினர் எஸ்கேபி கார்த்திக் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார்  செய்தார்.

இது தொடர்பாக மாமன்ற உறுப்பினர் எஸ்கேபி கார்த்திக் கூறியது.. மருத்துவர் வேணுகோபால் எந்த விசாரணையும் செய்யாமல் இறப்புச் சான்றிதழ் வழங்கி வருவதாக கேள்விப்பட்டேன்.இதனால் நான் வேறு ஒரு நபரிடம் எனது பெயரில் இறப்புச் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறினேன்.

இதன்படி மருத்துவர் நான் கடந்த 31.10.25 ஆம் தேதி மாரடைப்பால் இறந்து விட்டதாக எனது பெயருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளார். 

என்னிடம் எந்த விசாரணையும் செய்யாமல் இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் வேணுகோபால் மருத்துவத்துறையையே கலங்கப் படுத்தியிருக்கிறார்.அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.











No comments

Thank you for your comments