மாநிலத்திலேயே சிறந்த வங்கியாக காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி தேர்வு
காஞ்சிபுரம், நவ.20:
தமிழ்நாடு மாநில அளவிலான அனைத்திந்திய 72 வது கூட்டுறவு வார விழா திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது.
விழாவில் மாநிலத்திலேயே சிறந்த கூட்டுறவு வங்கியாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலரிடம் வழங்கினார்.
இவ்விழாவில் மாநிலம் முழுவதுமிருந்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விருது பெற்றது குறித்து மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் கூறியதாவது..
மாற்றுத்திறனாளிகளுக்கு மாநிலத்திலேயே அதிகமான அளவில் கடன் வழங்கி அவர்களை பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையச் செய்தது மற்றும் வங்கி வாடிக்கையாளர்களிடம் சிறந்த அணுகுமுறையை மேற்கொண்டது உள்ளிட்ட காரணங்களுக்காக மாநிலத்திலேயே சிறந்த வங்கிக்கான விருது கிடைத்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டிற்கான சிறந்த வங்கி விருது பெற்றது உட்பட மொத்தம் 3 முறை சிறந்த வங்கி விருது பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
No comments
Thank you for your comments