Breaking News

கோட்டேரி–வீரட்டிக்குப்பம் வனத்துறை சாலை விரிவாக்கப் பணி ஆரம்பம் - அமைச்சர் சி.வெ. கணேசன் அடிக்கல் நாட்டினார்


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோட்டேரி முதல் வீரட்டிக்குப்பம் வரை ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை, வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் கடந்த 50 ஆண்டுகளாக வெறும் 3.75 மீட்டர் அகலத்தில் இருந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டதுடன், பல விபத்துகளும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வந்தன.

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை அடுத்து, வனத்துறை அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ₹2 கோடி 5 லட்சம் மதிப்பீட்டில் இந்தச் சாலையை 7 மீட்டர் அகலமாக விரிவுபடுத்த நிதி ஒதுக்கியது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி   நடைபெற்றது.

திருவிழா தோரணமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கம்மாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ், அரசு துறை அதிகாரிகள், திமுக–காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள்

  • நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் — சிவசேனா
  • செயற்பொறியாளர் — வசந்த பிரியா
  • உதவி செயற்பொறியாளர் — சங்கர்

திமுக நிர்வாகிகள்

சுரேஷ், ஆசைத்தம்பி, கனக கோவிந்தசாமி, வேல்முருகன், மணிவேல், வீரபாண்டியன், வெங்கடேசன், நமச்சிவாயம், சக்திவேல், பூமணி உள்ளிட்டோர்.

காங்கிரஸ் நிர்வாகிகள்

சந்தனகுமார், ரஞ்சித் குமார், ஜெயசங்கர், அன்புமணி, லாவண்யா, பிரபாகரன், வைரமுத்து, வைசல், ஜெயகுரு, ஆனந்தராஜ், சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் துரை பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)







No comments

Thank you for your comments