துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் திமுகவினர் அன்னதானம்
காஞ்சிபுரம், நவ.29:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்,அன்னதானம் வழங்குவது உட்பட பல்வேறு உதவிகளை திமுகவினர் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் மாமமன்ற உறுப்பினர் சர்மிளா மற்றும் 24 வது வட்ட செயலாளர் சங்கர் ஆகியோரது ஏற்பாட்டில் கருணாநிதி பவள விழா மாளிகையருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்திமுக மாவட்ட பொருளாளர் சன்பிராண்டு ஆறுமுகம்,மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன்,காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் அன்னதானம் வழங்கினார்கள். நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
நல்ல பலன்களை அடைய என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?
No comments
Thank you for your comments