Breaking News

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் 73வது பிறந்தநாள் – மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி மனிதநேய சேவை


அவரின் நீடூடி சிறப்பாக வாழ மாணவர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். இதனை முன்னிட்டு, பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்திய குடியரசு கட்சி மாநில பொதுச்செயலாளர் கா. மங்கா பிள்ளை தலைமையில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட தலைவர் கதிர்வேல், மாவட்ட பொருளாளர் கணேசன், மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அலிபாபு,


விருத்தாசலம் ஒன்றிய தலைவர் ஜெயசீலன், நகர தலைவர் & முன்னாள் ஆசிரியர் ராஜேந்திரன்,

மங்கலம்பேட்டை நகரத் தலைவர் கதிர்காமன், இளைஞரணி துணைச்செயலாளர் ஆறுமுகம்,

மங்கலம்பேட்டை நகர பொறுப்பாளர் ஆதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்திய குடியரசு கட்சியின் சமூகப்பணிப் பார்வையை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பணி உள்ளூர் மக்களிடம் பாராட்டை பெற்றது.

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!













No comments

Thank you for your comments