காஞ்சிபுரத்தில் தொ.மு.ச. பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், நவ.29:
காஞ்சிபுரம் மாவட்ட தொமுச பேரவை மற்றும் அதன் இணைப்புச் சங்கங்கள் ஒருங்கிணைந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டங்களை கண்டித்தும்,அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்ட தலைவர் கே.ஏ.இளங்கோவன் தலைமை வகித்தார்.
மாநிலத் துணைத் தலைவர் ரா.பொன்ராம்,மாவட்ட செயலாளர் சுந்தரவரதரன்,டாஸ்மாக் பிரிவின் தொமுச மாநில செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை நிலைய பேச்சாளர் நாத்திகம் நாகராஜன்,தொமுச மாவட்ட தலைவர் வரதன் ஆகியோர் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.மத்தியில் ஆளும் மோடி அரசு தொழிலாளர் நல உரிமைகளை 4 தொகுப்புச் சட்டங்களாக திருத்தி தொழிலாளர் உரிமைகளை பறிக்கக்கூடாது.
இச்சட்டங்களை உடனடியாக அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும். இச்சட்டங்களால் தொழிலாளர்களின் உரிமைகளும்,அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
எனவே மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
நல்ல பலன்களை அடைய என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?
No comments
Thank you for your comments