ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.59 கோடி மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சிபுரம் எஸ்பி யிடம் புகார்
காஞ்சிபுரம், நவ.4:
விழுப்புரம் மாவட்டம் கள்ளப்புலியூர் கீழண்டை தெருவைச் சேர்ந்த சிகாமணி மனைவி தனலட்சுமி(50)கணவரை இழந்த இவரது தலைமையில் 13 பேர் ஏபிஆர் குருப்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் சீட்டுப்பணம் செலுத்தி திரும்பத் தரவில்லை.
மொத்தம் ரூ.1.59 கோடி வரை மோசடி செய்து விட்டதாகவும் பணத்தை அந்நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெற்றுத்தருமாறும் கூறி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கே.சண்முகத்தை சந்தித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர்.
புகார் செய்த பின்னர் தனலட்சுமி கூறுகையில் தமிழகம் முழுவதும் ஏபிஆர் குருப்ஸ் என்ற நிறுவனம் ஏலச்சீட்டு நடத்தி பலருக்கும் பணம் தராமல் இருந்து வருகிறது.நான் உட்பட 13 பேர் மொத்தம் இரு தவணைகளாக ரூ.1.59 கோடி வரை சீட்டுத்தொகை செலுத்தி இதுவரை பணம் தரவில்லை.
இது குறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான அல்தாப் தாசிப் என்பவர் தலைமறைவாக இ ருந்து வருவதுடன் அவ்வப்போது புகாரை வாபஸ் பெறுமாறும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
எனவே அல்தாப்தாசிப் என்ற முக்கியக் குற்றவாளியை கைது செய்ய வேண்டும், நாங்கள் சீட்டுத் தொகையாக செலுத்திய மொத்தம் ரூ.1.59 கோடியை பெற்றுத்தர வேண்டும் எனவும் அப்புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments