காஞ்சிபுரத்தில் தமிழறிஞர்களுக்கு விருது.. சிவனடியார் திருக்கூட்ட ஆண்டு விழாவில் வழங்கப்பட்டது
காஞ்சிபுரம், நவ.30:
காஞ்சிபுரம் சிவனடியார் திருக்கூட்டத்தின் 54 வது ஆண்டு விழா செங்கழுநீரோடை வீதியில் உள்ள திருநீலகண்டர் திருமண மாளிகையில் மிருதங்க வித்வான் திருமால் அரங்கத்தில் அதன் தலைவர் எம்.எஸ்.பூவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்கத்தில் சிவபூஜையும்,இடபக்கொடியும் ஏற்றப்பட்டது.காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தமிழறிஞர்களுக்கு பொற்கிழியும்விருதும் வழங்கி கௌரவித்தார்.
சி.அருணைவடிவேல் முதலியார் விருதினை சிவ.சண்முகசுந்தரத்துக்கும், முத்து.சு.மாணிக்கவாசக சுவாமிகள் விருதினை புலவர். பாண்டியனுக்கும், சு.வச்சிரவேல் முதலியார் விருது சிவ.வேளியப்பனுக்கும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒதுவாமூர்த்திகளுக்கு பொற்கிழியும், திருக்கோயில் வழிபாட்டு தோத்திரங்கள் என்ற நூலும் வெளியிடப்பட்டது.
மாலையில் நடைபெற்ற விழாவில் நீதிநூல் மற்றும் தேவாரப்போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!

No comments
Thank you for your comments