Breaking News

காஞ்சிபுரத்தில் அரசு அனுமதியின்றி தரமற்ற மணல் உற்பத்தி நிறுவனங்கள், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் புகார்


காஞ்சிபுரம், நவ.24:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசின் அனுமதியில்லாமல் 100க்கும் மேற்பட்ட தரமற்ற எம்.சாண்ட் மணல் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுவதாக திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில் அச்சங்க நிர்வாகிகள் ஆட்சியரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது..

காஞ்சிபுரம் மாவட்டம் மேவலூர் குப்பம் பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றினால் கட்டப்பட்ட குடியிருப்புகளின் மேல்பூச்சு கைகளால் தட்டினாலே விழுந்து விடுகிறது.தரமற்ற குடியிருப்புகள் தரமற்ற எம்.சாண்ட் மணலால் ட்டப்பட்டுள்ளது.

இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தரமற்ற எம்.சாண்ட் மணலால் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 162 எம்.சாண்ட் மணல் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றது. 

இதில் 35 மட்டுமே அனுமதி பெற்றவையாகும்.மீதம் உள்ளவற்றில் 100க்கு மேற்பட்டவை எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் தரமற்ற எம்.சாண்ட் மணல் உற்பத்தியை செய்து வருகின்றன.இது மிகவும் ஆபத்தானது.

எனவே அனுமதியில்லாமல் செயல்படும் எம்.சாண்ட் மணல் உற்பத்தி நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்.இரு வாரங்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் யுவராஜ் தலைமையிலான அச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



No comments

Thank you for your comments