Breaking News

ஸ்டடி வேர்ல்ட் பொறியியல் கல்லூரியில் யுவ ஆடுகளம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா..!

கோவை மதுக்கரை பாலத்துறை பகுதியில் உள்ள ஸ்டடி வேர்ல்ட் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கானயுவ ஆடுகளம் விளையாட்டுப் போட்டியின் 2025 பரிசளிப்பு விழா கல்லூரியின் தலைவர் டாக்டர் வித்யா வினோத் ஆலோசனைப்படி, கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பி. கோமதி, நிர்வாக அலுவலர் எம்.எம் மனோகரன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.



இவ்விளையாட்டு விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.கீதா முன்னிலை வகித்தார்.யுவ ஆடுகளம் விளையாட்டு விழாவில் மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 47 பள்ளிகளிலிருந்து 500 கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டி,பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி,பட்டிமன்றம் போன்ற இலக்கியப் போட்டிகளில் பெரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்ப டுத்தினர்.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விமானப்படை அதிகாரி (ஓய்வு) எம். மோகன் குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் கோப்பைகளை வழங்கி விழாவை சிறப்பித்தார்.இது குறித்து நிர்வாகம் சார்பாக தெரிவிக்கையில் இந்த யுவ ஆடுகளம் போட்டிகளில் கடந்த இரண்டு நாட்களாக மிக பிரம்மாண்ட மாகவும் சிறப்பாகவும் ஸ்டடி வேர்ல்ட் பொறியியல் கல்லூரி சார்பாக நடைபெற்றது. 


இதில் கலந்து கொன்ட மாணவ மாணவியர் களுக்கு பதிவு கட்டணம்,உணவு கட்டணம்,தங்கும் இட வசதிகளும் இலவச மாகவே நமது கல்லூரியின் சார்பாக ஏற்பாடு செய்திருந்தோம், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி நிர்வாகத்துக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும்வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் கல்லூரி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.



 இதில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள் கல்லூரி வழங்கிய வரவேற்பு, ஒழுங்கமைப்பு மற்றும் வசதிகளை பாராட்டினர்.உற்சாகம் நிரம்பிய முறையில் வெற்றிகரமாக யுவ ஆடுகளம் விழா நிறைவடைந்தது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.📱99942 55455 செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்




No comments

Thank you for your comments