Breaking News

காஞ்சி வரதர் கோயிலில் நிர்வாகச் சீர்கோடுகள்... ஆர்ப்பாட்டம் நடத்த அத்திவரதர் ஆலய பாதுகாப்புக் குழு முடிவு


காஞ்சிபுரம், நவ.8:

காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் நிர்வாகச்சீர்கேடுகள் நடைபெறுவதால் இம்மாதம் 23 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அத்திவரதர் ஆலய பாதுகாப்புக் குழு முடிவு செய்திருப்பதாகவும்,அதற்கு அனுமதி கேட்டும் குழு நிர்வாகிகள் எஸ்பியை சந்தித்து சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

காஞ்சி ஸ்ரீ அத்திவரதர் ஆலய பாதுகாப்புக் குழுவின் நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகத்தை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது..



வரதராஜசுவாமி கோயிலில் மூலவரை தரிசிக்க கட்டாய நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருக்கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்ய அனுமதி மறுப்பது, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது,சர்வ அதிகாரத்துடன் செயல்படும் கோயில் நிர்வாகம் ஆகியனவற்றைக் கண்டித்து வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.


இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறவுள்ளது.

எனவே வரதராஜசுவாமி கோயில் எதிரில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு மேடை அமைக்கவும்,ஒலி,ஒளி அமைக்கவும் அனுமதியளிக்குமாறு கேட்டு அத்திவரதர் ஆலய பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் அக்கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.















No comments

Thank you for your comments