பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம், நவ.25:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டவாறு பெண்கள் பேரணியில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியையும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.பேரணி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி மூங்கில் மண்டபத்தில் வந்து நிறைவுப்பெற்றது.
பேரணி தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன்,மகளிர் திட்ட இயக்குநர் மு.பிச்சாண்டி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள்,மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் உட்பட பலரும் கலந்து கண்டனர்.
No comments
Thank you for your comments