Breaking News

ஐய்யம்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

காஞ்சிபுரம்,  நவ.25:

காஞ்சிபுரம் அருகே ஐய்யம்பேட்டையில் பாஜக நெசவாளர் பிரிவின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே ஐய்யம்பேட்டையில் பாஜக நெசவாளர் பிரிவு சார்பில் நெசவாளர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் மார்னிங் ஸ்டார் அறக்கட்டளையுடன் இணைந்து நடபெற்றது.பாஜக மாவட்ட தலைவர் தாமரை. யு. ஜெகதீசன் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.



மாநில நெசவாளர் பிரிவின் துணைத் தலைவர் எஸ்.வஜ்ரவேல், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் மணி,துணைத்தலைவர் புவனேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 250க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு இலவச கண் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனைகளும் தேவைப்படுவோருக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

முகாமில் பாஜக காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் பெருமாள் உட்பட கட்சியின் நெசவாளர் பிரிவு நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments