காவல்துறை வாகனங்கள்... காஞ்சிபுரம் எஸ்பி நேரில் ஆய்வு
காஞ்சிபுரம், நவ.15:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் காவல்துறையினர் பயன்படுத்தும் இருசக்கர மற்றும் கார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
24 இருசக்கர வாகனங்கள்,21 கார்கள் உட்பட மொத்தம் 45 வாகனங்களை காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் ஆய்வு செய்து வாகனங்களின் நிலை,வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தொலை தொடர்பு சாதனங்களின் ஒளிரும் மின்விளக்குகளின் செயல்திறன், வாகனங்களில் உள்ள பழுது நீக்கும் கருவிகள் ஆகியனவற்றை தணிக்கை செய்தார்.
நெடுஞ்சாலைகளில் ரோந்து செல்லும் வாகனங்களில் இருக்க வேண்டிய எச்சரிக்கை சமிக்கைகள், பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சரியான முறையில் பயன்படுத்தப் படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து அவற்றை இயக்கியும் சோதனை மேற்கொண்டார்.
அத்துடன் காவலர் ஒருவரது ஓட்டுநர் இருக்கையில் எஸ்பி கே.சண்முகம் அமர்ந்து அது முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என அறிய அந்த வாகனத்தை அவரே நேரடியாக ஓட்டிப்பார்த்தும் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த காவலர்களுக்கு வாகனங்களையும்,அதன் ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்தும் முறை, சாலை விதிமுறைகள், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட்டின் முக்கியத்துவம், வாகனங்களை சுத்தமாக வைக்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியன குறித்தும் விரிவாக விளக்கினார்.
ஆய்வின் போது காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர்கணேஷ்,ஆயுதப்படைப்பிரிவு டிஎஸ்பி லோகநாதன் ஆகியோர் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments