Breaking News

காஞ்சிபுரத்தில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு மனிதச்சங்கிலி


காஞ்சிபுரம், நவ.14:

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சாலையில் உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் சுழற் சங்கம்,அன்னை தெரேசா அறக்கட்டளை,அன்னை சுகாதார அறிவியல் நிறுவனம் ஆகியன லைப் கேர் மருத்துவமனையுடன் இணைந்து உலக நீரிழிவு தினத்தையொட்டி மனிதச்சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.


நிகழ்விற்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.சுழற் சங்க தலைவர் வி.மகேஷ்,செயலாளர் சுபதிரவியம்,பொருளாளர் எஸ்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

லைப் கேர் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்.தி.அன்புச்செல்வன் மனிதச்சங்கிலி நிகழ்வில் கலந்து கொண்டு நீரிழிவு நோய் வராமல் தடுப்பது மற்றும் தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்,உணவு முறைகள் குறித்து விளக்கினார்.



அன்னை சுகாதார அறிவியல் நிறுவனத்தின் தலைவர் கிருபாசங்கர் ஏகாம்பரம் உட்பட சுழற்சங்க நிர்வாகிகள், செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவியர்கள், செவிலியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 



















No comments

Thank you for your comments