Breaking News

SIR-ல் முறைகேடு - திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்


காஞ்சிபுரம், நவ.20:

காஞ்சிபுரத்தில் வாக்காளர் திருத்தப் பணிகளில் பல்வேறு முறைகேடுகளை திமுக அரசு செய்வதாக கூறி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவகம் அருகில் காவலான் கேட் பகுதியில் அதிமுக சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

வாக்காளர் திருத்தப்பணிகளை செய்யும் வாக்குச்சாவடி அலுவலர்களை மிரட்டி பல்வேறு முறைகேடுகளை ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக அரசு செய்வதாக கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத். பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி.பன்னீர் செல்வம்,கழக எம்ஜிஆர் இளைஞர் அணியின் செயலாளர் எஸ்எஸ்ஆர்.சத்யா,மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர்.

செந்தில்ராஜன்,மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினார்கள்.

கட்சியின் கழக இலக்கிய அணியின் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான எஸ்.வைகைச்செல்வன் ஆர்ப்பாட்டத்தை  தொடக்கி வைத்து பேசுகையில்..

பீகாரில் வாக்காளர் திருத்தப்பணி நடந்த போது பல்வேறு குளறுபடிகளை செய்ததாக பாஜக அரசு மீது குற்றம் சாட்டினார்கள்.ஆனால் அங்கு தேர்தல் முடிந்த பிறகு இதுவரை எந்த இடத்திலும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.

எந்த தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு இல்லை. அதிமுக தொண்டர்கள் வாக்காளர் திருத்தப்பணிகள் நடந்து வரும் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.இல்லையேல் திமுக அதை சாதகமாக்கிக் கொண்டு விடும்.

வாக்காளர் திருத்தப் பணியில் போலி வாக்காளர்கள் களையெடுக்கப்படுவதால் திமுகவுக்கு அச்சம் வந்து விட்டது.வரும் 2026 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று பேசினார்.

No comments

Thank you for your comments