Breaking News

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம் - கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்



காஞ்சிபுரம், அக்.31:

காஞ்சிபுரம் எண்ணெய்க்காரத்தெருவில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையத்தை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி வெள்ளிக்கிழமை திறந்து வைத்து முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

சின்னக்காஞ்சிபுரம் எண்ணெய்க்காரத் தெருவில் அமைந்துள்ள முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையம் ரூ.65 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. 

இச்சங்க கட்டிடத்தை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டதுடன் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

இது குறித்து அமைச்சர் ஆர்.காந்தி கூறுகையில்..

புனரமைப்புக்கான திட்டத் தொகையில் அரசு மானியம் 48.75 லட்சமும்,திட்டத் தொகையில் ரூ.16.25 லட்சமும் விடுவிக்கப்பட்டு தரைத்தளமும்,முதல் தளமும் தலா 765 சதுர அடி பரப்பளவிற்கு விற்பனைக்காக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 1530 சதுர அடி பரப்பளவில் பணிகள் முடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.

திறப்பு விழாவிற்கு கைத்தறித்துறை அரசு செயலாளர் அமுதவல்லி,காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்பி.க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முருகன்பட்டு கூட்டுறவுச் சங்க தலைவர் ஏ.எஸ்.முத்துச்செல்வம் வரவேற்று பேசினார். விழாவில் கைத்தறித்துறை கூடுதல் இயக்குநர் தமிழரசி, இணை இயக்குநர் ரா.கணேசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவுச்சங்க பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments