ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசு சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட ஆரம்பித்துள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக வலசை பெரிய ஏரியில் திறந்து விடப்படுவதால், நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. ஏரியின் நீர் தற்போது கருப்பு நிறமாக மாறி, கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த நபர்
அதே ஏரியிலிருந்து எடுக்கப்படும் குடிநீர், வலசை, பிஞ்சனூர், இளைங்கினூர் பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த நீரை குடிக்கும் பொதுமக்களிடம் சிறுநீரக கோளாறுகள் அதிகரித்துள்ளதுடன், இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.
வசதியுள்ளோர் சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்கி குடிக்கின்றனர், ஆனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதே நீரை குடித்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், ஏரியின் நீரால் ஆடு, மாடு உள்ளிட்ட மிருகங்களும் இறந்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பலமுறை மனுக்கள் அளித்தும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இதுவரை எந்தச் செயல்பாடும் மேற்கொள்ளவில்லை என கிராமவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து, வலசை ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நூதன முறையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசை மணி, காத்தாயி உள்ளிட்ட கிராமவாசிகள், அரசு உடனடியாக ஆயில் நிறுவனங்களின் கழிவு நீர் வெளியேற்றத்தை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
விருத்தாசலம் அருகே கழிவு நீரால் காணாமல் போகும் கிராமம் — பொதுமக்கள் இடுப்பளவு தண்ணீரில் போராட்டம்!
Reviewed by D-Softech
on
November 01, 2025
Rating: 5
No comments
Thank you for your comments