வள்ளலார் மாத பூச சன்மார்க்கக் கருத்தரங்கம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்வு முருகன்குடியில் சிறப்பாக நடைபெற்றது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் முருகன்குடியில், வள்ளலார் பணியகம் சார்பில் வள்ளலார் மாத பூசையொட்டி சன்மார்க்கக் கருத்தரங்கமும் பசியாற்றுவித்தல் நிகழ்வும் இன்று (11 நவம்பர் 2025) செவ்வாய்கிழமை காலை 11.00 மணி முதல் 1.30 மணி வரை எம்.ஆர்.எஸ். ஈஸ்வரா வணிக வளாகம், முருகன்குடி வள்ளலார் பணியகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முருகன்குடி வள்ளலார் பணியகத்தின் சிறப்புத்தலைவர், நாட்டு வைத்தியர் சிவ. வரதராஜன் அவர்கள் திருவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு முதல்வர் அவர்களால் “திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர் விருது” பெற்ற கல்லக்குறிச்சி திருக்குறள் முற்றோதல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயவுத்திரு ஐயா மோகன் அவர்கள் “வள்ளலாரும் பல்லுயிர்களும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்க உரையாற்றினார்.
வள்ளலார் பணியகத்தின் செயலாளர் பெண்ணாடம் பிரதாபன் அவர்கள் அருட்பா பாடினார்.
நெய்வேலி நகரத்தைச் சேர்ந்த பா. சித்திவிநாயக மூர்த்தி – ஜோதி (இளமதி NLC பொறியாளர்) அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, குடும்பத்தினர் சார்பில் பசியாற்றுவித்தல் அறப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் சன்மார்க்க சான்றோர்கள், அன்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை பாரம்பரிய மருத்துவர் பெரங்கியம் சிவ. வரதராஜன் மற்றும் தயவுத்திரு பெண்ணாடம் சுப்பிரமணியன் ஆகியோர் வர்மா மற்றும் பாத சிகிச்சை கட்டணமில்லா மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
நிகழ்வை முருகன்குடி முருகன், அரா. கனகசபை, எரப்பாவூர் ராமசாமி, டிவி புத்தூர் வீராசாமி ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்.
No comments
Thank you for your comments