Breaking News

காஞ்சிபுரத்தில் மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.ஒரு லட்சம் கொள்ளை


காஞ்சிபுரம், நவ.1:

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள மளிகைகக்கடை ஒன்றின் பூட்டை உடைத்து பணப்பெட்டியில் இருந்த ரூ.ஒரு லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் ராஜாஜி மார்க்கெட் அருகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக  மளிகைக்  கடை நடத்தி வருபவர் பாலமுருகன். இவர் வழக்கம் போல  வெள்ளிக்கிழமை இரவு  கடையின் ஷட்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.

சனிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டும்,கடைக்குள் இருந்த பணப்பெட்டியும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.ஒரு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பாலமுருகன் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸôர் விசாரணை மேற்கொண்டனர்.

வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும்  தேடி வருகின்றனர்.தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்த தடயங்களை சேகரித்தனர்.

No comments

Thank you for your comments