Breaking News

காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை ஏரியில் சிறுவன் சடலமாக மீட்பு

AI Image

காஞ்சிபுரம், நவ.1:

காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை ஏரியில் 18 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்து கிடந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் சனிக்கிழமை மீட்ட நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை ஏரியில் சிறுவன் ஒருவரது சடலம் மிதப்பதாக தீயணைப்புத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனை மீட்டனர்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில் அச்சிறுவன் காஞ்சிபுரம் அம்மங் காரத் தெருவைச் சேர்ந்த சங்கரநாராயணன்(18)என்பதும் தெரிய வந்தது.அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா என விசாரணையும் நடைபெற்று வருகிறது.

No comments

Thank you for your comments