காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்AIADMK
காஞ்சிபுரம், நவ.28:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திமுக அரசின் அவலங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை அதிமுகவினர் வீடு,வீடாக சென்று வெள்ளிக்கிழமை வழங்கினார்கள்.
அதிமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அதன் மாவட்ட செயலாளர் கே.யு.சோமசுந்தரம் தலைமையில் பிள்ளையார்பாளையம் சிஎஸ்எம் தோப்பு தெருவில் திமுக அரசின் அவலங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
கட்சியின் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோம சுந்தரம் துண்டுப்பிரசுரங்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத். பா.கணேசன்,மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், கைத்தறிப்பிரிவு செயலாளர் யுவராஜ்,மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பிள்ûயார்பாளையம் சிஎஸ்எம் தோப்பு தெரு பகுதியில் உள்ள கடைகள்,வீடுகளுக்கு சென்று அவர்கள் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

No comments
Thank you for your comments