திருவண்ணாமலை திருக்குடைகள் உபய யாத்திரை காஞ்சிபுரம் வருகை
காஞ்சிபுரம், நவ.28:
இந்து ஆன்மீக சேவா சமிதி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு தீபத்திருவிழாவின் போது திருக்குடைகள் உபயமாக வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் 12 வது ஆண்டு திருக்குடைகள் உபய யாத்திரைக் குழுவினர் வடதிருமுல்லைவாயிலில் அமைந்துள்ள கொடியுடைய அம்மன் சமேத மாசிலாமணீஸ்வரர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பல்வேறு சிவாலயங்களையும் தரிசித்துக் கொண்டே காஞ்சிபுரம் வருகை தந்தனர்.
பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணாமலையார் சிவாலயத்தில் திருக்குடைகள் உபய யாத்திரைக் குழுவினர் வந்ததும் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு குழுவினருக்கும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் காஞ்சிபுரம் ஆழ்வார் பங்களா பகுதியில் தங்கியிருந்து மீண்டும் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர்.சிவனடியார் லிங்கேசன் ஐயா தலைமையில் வந்த இக்குழுவினர் திருவண்ணாமலை சென்றதும் அண்ணாமலை யாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் திருக்குடைகளை காணிக்கையாக வழங்கவுள்ளனர்.
திருக்குடைகள் ஊர்வலத்தில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
நல்ல பலன்களை அடைய என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?
No comments
Thank you for your comments