காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை
காஞ்சிபுரம், நவ.28:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகள் மற்றும் கல்அரவை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில் குறிப்பாக அன்னவாக்கம்,அரும்புலியூர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகிறது.
இதன் மூலம் பொருட்களை கனரக லாரிகளில் எடுத்துச் செல்லும் போது அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களால் பொதுமக்கள் உயிரிழப்பதும் தொடர்கிறது.
அண்மையில் திருமுக்கூடல் பகுதியை சேர்ந்த தொழிலாளி சக்திவேல் என்பவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதனையடுத்து காவல்துறையினர் திருமுக்கூடல் பகுதியில் கனரக லாரிகள் செல்ல தடைவிதித்திருந்தனர்.
இந்நிலையில் சாலவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பாலச்சந்திரன் தலைமையில் கல்குவாரி மற்றும் கல் அரவை உரிமையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பள்ளி நேரங்களில் 4 மணி நேரம் போக்குவரத்துக்கு தடை விதிப்பது,திருமுக்கூடல் மேம்பாலத்தில் விளக்குகள் அமைப்பது, சாலையை செப்பனிடுவது, அதிக வேகத்தில் செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிப்பது, விபத்துப்பகுதி என்ற எச்சரிக்கை பலகைகள் வைப்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை இறுதி செய்து இவையனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் அமல்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
நல்ல பலன்களை அடைய என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?
No comments
Thank you for your comments