Breaking News

இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு – அதிர்ஷ்டவசாமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!


 விருத்தாசலம், 12 நவம்பர் 2025:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பொன்னேரி–புடவை சாலையில் இன்று காலை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.


சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவரின் வாகனத்தில் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. சாலையைக் குறுக்கே கடக்க முயன்ற பாம்பு திடீரென பாய்ந்து பின்சக்கரத்தில் சிக்கி, செயின் பிராக்கெட்டுக்குள் நுழைந்தது.


இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுநர் உடனே வாகனத்தை நிறுத்தி, தைரியமாக ஒரு குச்சியின் உதவியுடன் பாம்பை வெளியே எடுக்க முயன்றார். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, பாம்பு நசுங்கிய நிலையில் வாகனத்திலிருந்து வெளியே வந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டுநர் உயிர் தப்பினார்.



இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தகவல் அறிந்ததும், “இது மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம்; சிறிதளவு தாமதம் இருந்திருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்தனர்.


📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)



















No comments

Thank you for your comments