Breaking News

கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் வீரியம்பாளையத்தில் 2.18 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடம் திறப்புவிழா !

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள வீரியம்பாளையத்தில் 2.18 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப. ராஜ்குமார் கலந்து கொண்டு புதிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் கேஎம்சிஹெச்  மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி,துணைதலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமசந்திரன், மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன்  மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



கேஎம்சிஹெச்  மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி,கூறியதாவது கல்வி மற்றும் சமூக முன்னேற்றப்  பணிகளில் கேஎம்சிஹெச் தொடர்ந்து அக்கறையுடன் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ. 2 கோடியே 18 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் 7 வகுப்பறைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தனி தனியே கழிவறைகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை துடியலூர் வடமதுரை மற்றும் கழிக்க நாயகன்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடம், ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டியில் ரூ. 2 கோடியே 11 இலட்சம் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடம்,கோவை மாவட்டத்தில் அமையவுள்ள உலகத்தர கிரிக்கெட்  மைதானத்திற்கு ரூ. 1கோடி நிதிஉதவியும் வழங்கப்பட்டுள்ளது, மேலும் சமூக பணிகள் செய்வதன் மூலம் மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கும்  முன்னேற்றத்திற்கும் உதவிகரமாக இருக்கும் என்றும்  குறிப்பிட்டார்.



அதனைத்தொடர்ந்து மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சமூக கடமை நிதியினை சிஎஸ்ஆர்  பிற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செலவிடுவதை முன்னுரிமையாக கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உட்பட ஏரளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: லீலாகிருஷ்ணன்

 –📱99942 55455



No comments

Thank you for your comments