Breaking News

தேசியகராத்தே போட்டி - காஞ்சிபுரம் மாணவர்கள் சிறப்பிடம்


காஞ்சிபுரம், நவ.10:

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவ,மாணவியர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

இக்கோவாஷி கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் அண்மையில் ஈரோட்டில் நடைபெற்றது.தமிழகம்,ஆந்திரம்,கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 1200க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்தனர்.



காஞ்சிபுரம் இக்கோவாஷ் அசோசியேஷன் பள்ளியின் தலைமை பயிற்சியாளர் பிரபாகரன் தலைமையில் 7 பேர் பங்கேற்றனர்.இவர்கள் 7 பேரில் முதலிடத்தை இருவரும்,2 வது இடத்தை 5 பேரும் பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவி ஹேமாவதியும், குளோபல் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீ வைகுண்டர் ஆகிய இருவரும் தேசிய அளவில் முதலிடத்தை பெற்றனர். இரண்டாவது இடத்தை காஞ்சிபுரம் குருஷேத்ரா பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவர் கேசவ்,பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் ரோஹித்,அந்திரசன் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் ரித்திக், திருக்காலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் முகிலன் ஆகியோரும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களை உலக கராத்தே சங்க நடுவர் சம்பத்குமார்,டிரெடிஷனல் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் செழியன் ஆகியோர் பரிசுக்கோப்பையும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்கள்.


.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 


.

No comments

Thank you for your comments