Breaking News

கடந்த 5 ஆண்டுகளில் 30644 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா - ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேச்சு


காஞ்சிபுரம்,நவ.13:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 30644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பேசினார்.



காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமலையில் 180 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.

எம்பி க.செல்வம்,எம்எல்ஏ க.சுந்தர்,மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன்,சார் ஆட்சியர் ஆஷிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கி பேசியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக 30644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 4739 பேர் பழங்குடியினர்,பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தின் கீழ் 440 பேர்,மாற்றுத்திறனாளிகள் 211,திருநங்கைகள் 138 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார். 

விழாவில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மலர்க்கொடி குமார் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 



















No comments

Thank you for your comments