Breaking News

புயல் எச்சரிக்கை,காஞ்சிபுரத்தில் தயார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்


காஞ்சிபுரம், நவ.29:

இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள புயல் எச்சரிக்கையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கினால் உடனுக்குடன் வெளியேற்றும் வகையில் தயார் நிலையில் 50க்கும் மேற்பட்ட நெடுஞ் சாலைத்துறை பணியாளர்கள் சனிக்கிழமை தயார் நிலையில் இருந்தனர்.

டித்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி வந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயல் சின்னம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அதிக கனமழை பெய்யும் எனவும் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

நவ.29, 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த பேரிடரையும் சமாளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புயலால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க 4 ஜெசிபிக்கள்,10க்கும் மேற்பட்ட மரம் அறுக்கும் கருவிகள், மண்வெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தயார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

பொதுமக்களும் தேவையில்லாமல் வீட்டிலிருந்து வெளியில் வர வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது.

 .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்! 

நல்ல பலன்களை அடைய என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?










No comments

Thank you for your comments