Breaking News

கூட்டுறவு நிறுவனங்களில் உதவியாளர் பணிக்கு நாளை எழுத்துத்தேர்வு - தேர்வு மையத்துக்கு பேருந்து வசதி

காஞ்சிபுரம் : 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கீழம்பியில் நடைபெறும் மையத்துக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்திருப்பதாக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் தலைவர் பா.ஜெயஸ்ரீ வியாழக்கிழமை தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நாளை அக்.11 ஆம் தேதி சனிக்கிழமை எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் கீழம்பி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு தொடங்கும் எழுத்துத் தேர்வு மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.

தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எளிதில் சென்று வர நாளை காலை 7 மணிக்கும், தேர்வு முடிந்த பின்னர் மதியம் ஒரு மணிக்கு தேர்வு மையத்திலிருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு திரும்பவும் சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுபவர்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம். 

மேலும் தேர்வு தொடர்பான உதவிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 9043046100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments