Breaking News

விருத்தாசலம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் – பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு 🌿

 

விருத்தாசலம் :

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி மணவாளநல்லூர் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். இதன் போது புகையிலைப் பயன்பாட்டை எதிர்த்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், மூன்று கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

மின்சாரத்துறை சார்பில், பெயர் மாற்ற மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரை மணி நேரத்திற்குள் ஆணைகள் வழங்கப்பட்டன என்பது முகாமின் சிறப்பாகும்.

முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கால்நடை பராமரிப்பு, வேளாண்மை, தோட்டக்கலை, மின்சாரம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட 15 துறைகளின் அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, சங்கர், செல்வபாலன், திமுக ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு திட்டத்தினை பற்றி விளக்க உரையாற்றினர்.


அதேபோல் ஒன்றிய துணை செயலாளர் மணிவேல், அருள் குமார், வெங்கடேசன், வீரபாண்டியன், திருஞானம், பெரியசாமி, பாலபாரதி, சுபாஷ், ஜெயராமன், விஸ்வநாதன், மணிகண்டன், சுந்தர், லெனின், கோபால், பிரபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545





No comments

Thank you for your comments