கோகிளாம் விற்பனை கண்காட்சி துவக்கம் ...!
கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல கோ கிளாமின் அவிநாசி சாலை பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் தனது சிறப்பு விற்பனை கண்காட்சியானது கோ கிளாம் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீணா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக,மயில் தமிழ்செல்வி,ஹேமிகா,வாணி,ஜெயலட்சுமி,ராஜபாளையம் ஆனந்தாஸ் சனா,சாய்,கீர்த்தனா,வித்யா மதி,ஸ்ரீநிதி,ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.விற்பனை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா, ராகுல் செய்தியாளர்களிடம் கூறுகையில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகின்றோம். மேலும் இக்கண்காட்சியானது அக்டோபர் 10ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காட்டன் ஆடைகள்,வீட்டு அலங்கார பொருட்கள், அணிகலன்கள்,நகைகள்,விற்பனைக்கான ,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,குறிப்பாக கண்காட்சியில், பெண்களுக்கான லேட்டஸ்ட் மாடல் ஆடைகள், கொல்கத்தா,லூதியானா,குஜராத், டில்லி,ஜெய்ப்பூர்,புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக விற்பனை செய்யபடுவதாகவும் கண்காட்சியில் ஆடை, ஆபரணங்கள், , குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள்,பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள்,பிரத்யேக டிசைனில் உருவாக்கப்பட்ட காலணிகள் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல்,வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு, நாமக்கல்,உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வருகை புரிந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வதாக தெரிவித்தனர். இந்த தீபாவளி அனைவருக்கும் கோ கிளாம் தீபாவளியாக அமையும் என்று தெரிவித்தனர்.கண்காட்சியில் முக்கிய பிரமுகர்கள் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்

No comments
Thank you for your comments