Breaking News

விருத்தாசலத்தில் கணவரை சில்வர் குடத்தால் அடித்து கொலை – மனைவி கைது


விருத்தாசலம்  :

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் வேல்முருகன் (36), அடிக்கடி மது அருந்துவதால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை இருந்து வந்தது.


சமீபத்தில், மனைவி வள்ளி ஆயிரம் ரூபாய் கொடுத்து வீட்டு தேவைகள் வாங்க சொல்ல, வேல்முருகன் மீதிப் பணத்தில் மது அருந்தினார். இதனால் இருவருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது.

அப்போது வள்ளி, கணவரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் பூட்டி வைத்தார். அடுத்த நாள் காலை பால் வாங்கி வீடு திரும்பிய வள்ளியிடம், வீட்டிற்குள் நுழைந்த வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த வள்ளி, வீட்டில் இருந்த சில்வர் குடத்தை எடுத்து கணவரின் தலையில் பலமாக தாக்கினார்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மரணம்

காயமடைந்த வேல்முருகனை அங்கிருந்தவர்கள் உடனே விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

போலீஸ் விசாரணை

இச்சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். வள்ளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


📰 செய்தியாளர்

R. காமராஜ் – 9080215691
ஒளிப்பதிவாளர் V. வேல்முருகன் – 8072117545

No comments

Thank you for your comments