காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம், அக்.3:
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அவை பதிவு செய்யப்படுவதை ஆட்சியர் பார்வையிட்டார்.
இதனையடுத்து முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.முகாமில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமையும் அங்கு மருத்துவச் சேவைகள் வழங்கப்படுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பரிசோதனை முகாம்களையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
No comments
Thank you for your comments