விஜயதசமியையோட்டி கோவையில் கத்தி போடும் திருவிழா...!
கோவை மாவட்டம் ராஜவீதி ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இவ்வாண்டில் நடைபெற்ற நவராத்திரி நிறைவு விழாவான விஜயதசமியன்று பக்தர்கள் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.
பூ மார்க்கெட் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகலி யிருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ராஜவீதி சௌடேஸ்வரி அம்மன் கோவிலை நோக்கி ஊர்வலம் நடந்து சென்றனர். இதில் இரண்டாயிர த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேசுக்கோ தீசுக்கோ என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி ரத்தம் சொட்ட சொட்ட நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் திரளான பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தாக்கள் பால்ராஜ், மோகன், கோவில் நிர்வாக தலைவர் பாலசுப்பிரமணியன் உபத்தலைவர் வினோத்குமார் ,பால் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் து. பரமசிவம் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பக்தர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தி சௌடேஸ்வரி அம்மன் அருள் பெற்றனர்.


No comments
Thank you for your comments