Breaking News

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் தலைவர் தர்ணா போராட்டம் – நிதி வழங்க கோரிக்கை


 விருத்தாசலம் :

விருத்தாசலம் அருகே மாத்தூர் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் சுப்ரமணியன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்   மாலை 4.00 மணியளவில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் பேசியதில், “2023–24 ஆம் ஆண்டுக்கான 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ், 36 மீட்டர் நீளத்தில் ₹1.16 லட்சம் மதிப்பில் செம்மண் ஜல்லி சாலை அமைத்தேன். அதற்குரிய பணியை முடித்து, அப்போதைய பி.டி.ஓ. சுகன்யாவிடம் பணம் வழங்குமாறு கேட்டேன். ஆனால் தற்போது பதவிக்காலம் முடிந்ததையடுத்து ‘அனுமதி புத்தகம் தொலைந்துவிட்டது’ என கூறி பணத்தை வழங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர்” என குற்றம்சாட்டினார்.



இதையடுத்து, பி.டி.ஓ.க்கள் லட்சுமி, சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், “15 நாட்களுக்குள் நேரில் விசாரணை நடத்தப்படும். பணிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவாக உறுதி செய்யப்பட்டால், அதற்குரிய நிதியை கலெக்டரின் அனுமதியுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தனர்.

ஆனால் இதை ஏற்காத முன்னாள் தலைவர் சுப்ரமணியன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். இதனால், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



No comments

Thank you for your comments