உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி — காஞ்சிபுரத்தில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற சாலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் காரை வழிமறித்து வன்முறையில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தெற்கு மாவட்ட செயலாளர் எழிலரசு, மாநகர மாவட்ட செயலாளர் மதி. ஆதவன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் மேனகாதேவி கோமகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் பார்வேந்தன் மற்றும் மேலிட பொறுப்பாளர் பாசறை செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பாலாஜி, நிர்வாகி வினோத்குமார், மாநில பொறுப்பாளர் விப்பேடு அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments
Thank you for your comments