Breaking News

விருத்தாசலத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை — போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை



 விருத்தாசலம் :




இதையடுத்து, விருத்தாசலம் மண்டல துணை தாசில்தார் அன்பரசன், வருவாய் ஆய்வாளர் அருந்ததி, கிராம நிர்வாக அதிகாரி சத்யராஜ் ஆகியோர், மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, கழிவறையை இடிக்க முயன்றபோது, சம்பந்தப்பட்ட நபர் “நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இடிக்கக்கூடாது” என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். அச்சமயத்தில், அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பிளாஸ்டிக் கேனை போலீசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கழிவறை கட்டிடம், உளுந்து சாகுபடி செய்யப்பட்ட வயல், மரங்கள், கொட்டகை உள்ளிட்ட அனைத்தும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டன.

செய்தியாளர் R. காமராஜ் – 9080215691

ஒளிப்பதிவாளர் V. வேல்முருகன் – 8072117545



No comments

Thank you for your comments